Friday 11 October 2013

இலக்கியம்: கனடா பெண் எழுத்தாளருக்கு நோபல் பரிசு

கனடாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அலைஸ் மன்றோ, இலக்கியத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசை வென்றுள்ளார்.

அவரைத் தேர்வு செய்த ஸ்வீடன் இலக்கியக் கழகம், "சமகால இலக்கிய மேதை' என்று அவரை வர்ணித்துள்ளது.
""அலைஸின் தெளிவும், நிதர்சனமும் நிறைந்த அழகிய கதை சொல்லும் பாங்கு, அவரை சிறுகதை உலகின் தலைசிறந்த எழுத்தாளர் என்று சொல்ல வைக்கிறது'' என்று அந்த அமைப்பு பாராட்டியுள்ளது.
82 வயதாகும் அலைஸ் மன்றோ, இலக்கியத்துக்கான நோபல் பரிசை வெல்லும் இரண்டாவது கனடா நாட்டு எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 1976-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற சால் பெல்லோ, கனடாவில் பிறந்து, சிறு வயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர்.
இந்த ஆண்டு நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அலைஸ் மன்றோவுக்கு, பரிசுத் தொகையாக 12 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ.7.34 கோடி) வழங்கப்படும்.
நோபல் பரிசுக்கு முன்னரே, 2009-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் "மேன் புக்கர்" சர்வதேசப் பரிசை அலைஸ் மன்றோ வென்றுள்ளார். மேலும், கனடாவின் உயரிய இலக்கிய விருதான "கவர்னர்' பரிசை இவர் மூன்று முறை வென்றுள்ளார்.
சென்ற ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, சீன எழுத்தாளர்
மே யானுக்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment